மதுரை திருநகரை சேர்ந்த சவரப் கந்தல்வாள் என்பவர் நேற்று முன்தினம் (15-ந்தேதி) புனலூர்–மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயில் மதுரை வந்தடைந்தபோது அவர் கொண்டு வந்த ஆப்பிள் ஐபேட் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து நேற்று மதுரை இருப்புப்பாதை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மதுரை இருப்புப்பாதை துணை போலீஸ் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் ரயில் நிலைய நடைமேடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, புகார்தாரரின் செல்போனில் இருந்த ‘Find My Device’ செயலி மூலம் ஐபேட்டின் இருப்பிடத்தை போலீசார் கண்காணித்தனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் படுக்கை விரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த மதுரை பேரையூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து திருடப்பட்ட ஆப்பிள் ஐபேட்டை மீட்டனர். பின்னர் அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐபேடை திருடிய ரயில்வே ஊழியர் கைது
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ஐபேட்டை திருடிய ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது
புனலூர்–மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி கொண்டு வந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ஆப்பிள் ஐபேட்டை திருடிய ரயில்வே ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்
Visil Administrator
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




