தூத்துக்குடி மாவட்டம், காமராஜர் நகர் பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மதுபான கடை அமைய உள்ள பகுதியில் தேவாலயம், குடியிருப்புகள் மற்றும் ராகவேந்திரா கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால், அப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது கடை அகற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் டாஸ்மாக் கடை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, மீளவிட்டான், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு, மதுபானக் கடை அமைய உள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இப்பகுதியில் வங்கி, ரேஷன் கடை மற்றும் பேருந்து சேவை உள்ளிட்டவை உள்ளதால், மதுபான கடை அமைந்தால் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர், கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிப்காட் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
தூத்துக்குடி காமராஜர் நகரில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
காமராஜர் நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




