சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த ஐயம்பெருமாள், கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் ஆனந்த் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நிறுவனத்திற்குச் சொந்தமான இரும்புக் கம்பிகள் மற்றும் ஆங்கிள்கள் உள்ளிட்ட சுமார் ரூ. 35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முறைகேடாக கையாளப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் முடிவில் மேலாளர் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, முறைகேடாக கையாளப்பட்ட பொருட்கள் எங்கு சென்றன பணம் எங்கே சென்றது? இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஆனந்த், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கட்டுமான நிறுவனத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முறைகேடு புகார் - மேலாளர் கைது
சென்னை புழலில் கட்டுமான நிறுவனத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முறைகேடு புகார் மேலாளர் கைது
புழலில் ரூ.35 லட்சம் மதிப்பிலான கட்டுமானப் பொருட்கள் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில், நிறுவன மேலாளர் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




