மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, பெண்களின் வாழ்க்கையில் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜகவின் முக்கிய முன்னுரிமை என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் தாய்மார்களும் சகோதரிகளும் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கூறிய பிரதமர், பெண்கள் பல்வேறு இன்னல்களையும், நீண்டகால காத்திருப்புகளையும் சந்தித்துள்ளதாக குறிப்பிட்டார்.இதையடுத்து, பேச்சு குறைவு செயல் அதிகம் என்ற கொள்கையுடன் அரசு செயல்பட்டு வருவதாகவும், மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், ஏராளமான பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இடைத்தரகர்கள் இல்லாமல் முழுத் தொகையும் பயனாளிகளுக்கு சென்றடைவதை அரசு உறுதி செய்து வருவதாகவும் பிரதமர் கூறினார். பெண்களின் வாழ்க்கையில் முழுவதும் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை என்று கூறினார். இதனை தொடர்ந்து, தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை - பிரதமர் மோடி
பெண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களின் வாழ்க்கையில் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜகவின் முக்கிய முன்னுரிமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
Visil Administrator
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.


