சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி பேரணியாக சென்றனர். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்ததைப் போன்று, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தையும் கைவிட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதே மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
புதிய தலைமை செயலகத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:





